Quantcast
Channel: Tamil Brahmins - 1,8,12,13,14,16,18,19,20,21,24,25,26,27,28,29,30,31,32,33,34,35,36,37,38,39,40,41,43,44,49,50,51,52,53,54,55,57,58,59,60,61,62,63,65,68,69,70,73,74,75,76,78,79,80,81,82,83,84,85,86,87,88,89,92,93,94,95,96,97,98,100,101,102
Viewing all articles
Browse latest Browse all 5709

செய்யும் தொழிலே தெய்வம்

$
0
0
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”.
குறள் 972:பொருட்பால் - குடியியல் – பெருமை
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும்
செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால்
சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை என்பது இக்குறளுக்குரிய
பொது விளக்கமாகும்


“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”
எப்பிறப்பை பற்றி வள்ளுவர் இங்கு குறிப்பிடுகிறார்?
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்பது
அவ்வையின் கூற்று. அவ்வாறெனின் மானிடப்பிறவி
கிடைக்குமுன் அவ்வுயிர்கள் இவ்வுலகில் எதோ ஒரு
ஜீவராசியாக உலா வந்து கொண்டிருகிறது என்பது
திண்ணமாகிறது !! மேலும் எவ்வுயிரும் தாம் விரும்பி
தம் முயற்சியாலேயே மானிடப்பிறப்பு எடுத்துள்ளேன்
என்று பறைசாற்றி கொள்ளவே இயலாது.
இறையருள் கைகூடினால் மட்டுமே இவ்வரிய மானிடப்பிறவி
அவ்வுயிர்களுக்கு கிட்டும் என்பதை விளக்கவே அரிது அரிது
என்று இருமுறை இச்சொல்லை பயன்படுத்துகிறார். இக்கருத்தில்
இறையருளால் கிடைக்கப்பெற்ற மானுடப்பிறப்பு என்பது
எல்லா உயிர்க்கும் சமமான ஒன்றாகிறது.



“செய்தொழில்” என்பது பிறப்பின் அடிப்படையில்
(விதியின் அடிப்படையில்) ஒவ்வொரு மனிதனுக்காகவும்
உருவாக்கப்பட்ட தொழிலே செய்தொழில் என்பதாகும்.
இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் தனக்காக நிர்ணயக்கப்பட்ட
செய்தொழிலை வரப்பிரசாதமாக மற்றவர்களுக்கு கிடைத்த
தொழிலோடு ஒப்பிட்டுப் பாராமல்
செய்யும் தொழிலே தெய்வாமாக போற்றி
செய்யின் அதில் திறமை என்னும் இறையருள் வெளிப்பட்டு
சிறப்பிக்கப்படுவார்கள்.


அஃதின்றி தம் பிறப்பிலிருந்து (இறையருளிலிருந்து)
செய்தொழிலை வேறுபடுத்தி தானே அத்தொழிலுக்கு
கர்த்தாவாக நினைப்பின்,அத்தகையவர்கள் செய்யும் தொழில்
ஒன்றேயாய் இருப்பினும் அதன் சிறப்பியில்புகள்
ஒவ்வாததாகவே இருக்கும்.


Sairam

Viewing all articles
Browse latest Browse all 5709

Trending Articles