#2693 to #2697
#2693. உள்ளே உள்ள விளக்கொளி
உண்டில்லை என்னும் உலகத்து இயல்பிது
பண்டில்லை என்னும் பரங்கதி யுண்டுகொல்
கண்டில்லை மானுடர் கண்ட கருத்துறில்
விண்டில்லை உள்ளே விளக்கொளி யாமே.
உலகத்தினர், உலகுக்குக் காரணம் ஆன இறைவன் என்று ஒருவன் உண்டு! என்றும் இல்லை! என்றும் பலவாறாகக் கூறுவர். ஆன்மாவைப் விடப் பழமையானது ஒன்றும் இல்லை! என்று கூறுபவர்க்குப் பரகதி கிடைக்குமோ? இறைவனைக் கண்டதில்லை! என்று கூறுபவர்களும் கூட சிவனை அறிய விரும்பினால் அவனைத் தில்லை ஆகிய தம் மனமண்டலத்தில் ஒளியாக விளங்கும் ஈசனாகக் காணலாம்.
#2694. சாதகன் ஞாலத் துறவி ஆவான்
சுடருற ஒங்கிய ஒள்ளொளி ஆங்கே
படருறு காட்சிப் பகலவன் ஈசன்
அடருறு மாயையின் ஆரிருள் வீசில்
உடலுறு ஞாலத் துறவியன் ஆமே
ஒண்சுடர் பொருந்திய, ஓர் உயரிய ஒளி வடிவானவன் ஈசன். அவன் சாதகனின் உள்ளத்தில் கதிரவன் போலப் படர்ந்து விரிந்து காட்சி தருவான். அந்த ஒளியின் உதவியுடன், தன் உள்ளத்தில் அடர்ந்து படர்ந்திருந்த மாயையின் இருளை நீக்கினால், உடலுடன் கூடி இருக்கும் போதே சாதகன் இந்த உலகைத் துறக்க முடியும்.
#2695. செம்பொன் ஆதிப்பிரான்
ஒளிபவ ளத்திரு மேனிவெண் ணீற்றன்
அளிபவ ளச்சொம்பொன் ஆதிப் பிரானும்
களிபவ ளத்தினன் காரிருள் நீங்கி
ஒளிபவ ளத்தென்னோடு ஈசன்நின் றானே.
ஒளி வீசுகின்ற பவளம் போன்ற மேனியை உடையவன் சிவன். அந்தப் பவளமேனியில் ஒளி வீசும் வெண்ணீறு தரித்தவன் சிவன். முதிர்ந்த பவள மேனியினன் ஆகிய சிவன் மூலாதாரத்தில் இருந்து சீவனுக்குக் களிப்பைத் தருபவன். கரிய பாச இருளை என்னிடம் இருந்து நீக்கி விட்டான் பால்வண்ண நிறம் படைத்த, என்னுடன் எப்போதும் பிரியாது இருக்கும் என் ஈசன்.
#2696. வாசம் வீசும் மலர் போன்றவன்
ஈசன்நின் றான்இமை யோர்கள்நின் றார்நின்ற
தேசம்ஒன் றின்றித் திகைத்துஇழைக் கின்றனர்
பாசம்ஒன் றாகப் பழவினை பற்றற
வாசம்ஒன் றாம்மலர் போன்றது தானே.
இறைவன் வான் மண்டலத்தில் இருந்தான். அமரர்களும் வான் மண்டலத்தில் இருந்தனர். என்றாலும் ஒளியற்றவர்களாக அவர்கள் மக்களை பூமியை நோக்கிச் செலுத்துகின்றனர். சீவனின் இருவினைகளும், மேலும் வரும் வினைகளும் ஈசன் அருளால் அடியோடு நீங்கி விட்டதால், மலரும் பொழுது மலர் நறுமணம் வீசுவதைப் போலவே சிவன் சீவனிடம் நன்கு வியாபிப்பான்!
#2697. பானாய் இருக்கப் பரவலும் ஆமே.
தானே யிருக்கும் அவற்றில் தலைவனும்
தானே யிருக்கும் அவனென நண்ணிடும்
வானாய் இருக்கும்இம் மாயிரு ஞாலத்துப்
பானாய் இருக்கப் பரவலும் ஆமே.
வானவர்கள் மானவர்களை உலகத்தில் செலுத்துவர். வானவர் கோன் ஆகியவன் சிவன். சீவனுக்கு முக்தியை அளித்துத் தன்னுடன் இணைத்துக் கொள்வதில் அவனைவிடச் சிறந்தவர்கள் எவரும் இல்லை. அளவில்லாத வானமாக பரவி உள்ளவன் சிவன். சீவன் சிவனுடன் இணைந்தால் அவனும் பரவியும் விரவியும் வானத்தைப் போல ஆகிவிடுவான்.