Quantcast
Channel: Tamil Brahmins - 1,8,12,13,14,16,18,19,20,21,24,25,26,27,28,29,30,31,32,33,34,35,36,37,38,39,40,41,43,44,49,50,51,52,53,54,55,57,58,59,60,61,62,63,65,68,69,70,73,74,75,76,78,79,80,81,82,83,84,85,86,87,88,89,92,93,94,95,96,97,98,100,101,102
Viewing all articles
Browse latest Browse all 5709

News-updates

$
0
0
It is the commuter who pays the penalty….

இடது கையில் செல்போன்.. வலது கையால் கியர்... ஸ்டீயரிங்கை பிடிக்காமல் பஸ்ஸை இயக்கிய தற்காலிக ஓட்டுநரால் பயணிகள் அச்சம்- மற்றொரு பேருந்தில் போலி நடத்துநர் ‘வசூல்’




பெரம்பலூர்- ஆத்தூர் வழித்தடத்தில் திருச்சி பதிவு எண் கொண்ட (டிஎன் 45- எண் 3096) அரசுப் பேருந்தில் தற்காலிக ஓட்டுநர் ஒருவர் செல்போனில் பேசியபடி பேருந்தை இயக்கினார்.

15 நிமிடங்களாக அவர் செல்போனில் பேசியபடி பேருந்தை இயக்கியதை அச்சத்துடன் பார்த்த பயணி ஒருவர், வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ காட்சியில், இடது கையில் செல்போனை பேசும் தற்காலிக ஓட்டுநர், வலது கையால் கியர் போடும்போது ஸ்டீயரிங்கை பிடிக்காமல் பேருந்தை இயக்கிய காட்சி பதிவாகி உள்ளது.
சினிமா பாணியில் டிக்கெட் வசூல்

பெரம்பலூரில் இருந்து ஆத்தூர் செல்லும் பெயர்ப் பலகையுடன் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று காலை அரசுப் பேருந்து ஒன்று நின்றுகொண்டு இருந்தது. அதில், பயணிகள் பலர் அமர்ந்திருந்தனர். அந்தப் பேருந்தில் ஏறிய நடத்துநர் ஒருவர், “டிக்கெட்... டிக்கெட்...” எனக் கேட்டு பயணிகள் சிலரிடம் தலா ரூ.30 வாங்கிக்கொண்டு டிக்கெட் கொடுக்காமல் கீழே இறங்கிச் சென்றுவிட்டாராம். பின்னர், சிறிது நேரம் கழித்து மற்றொரு நடத்துநர் வந்து பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகளிடம், டிக்கெட் எடுக்குமாறு கேட்டுள்ளார். அப்போது, “ஒரு பஸ்ஸுக்கு எத்தனை கண்டக்டர் வந்து டிக்கெட் கேட்பீர்கள்” எனக் கேட்டு பயணிகள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Read more at: http://tamil.thehindu.com/tamilnadu/article22402302.ece


Viewing all articles
Browse latest Browse all 5709

Trending Articles