#919 to #923
#919. இறைவன் இருக்குமிடம்
ஆலயம் ஆக அமர்ந்த பஞ்சாக்கரம்
ஆலயம் ஆக அமர்ந்த இத்தூலம் போய்,
ஆலயம் ஆக அறிகின்ற சூக்குமம்
ஆலயம் ஆக அமர்ந்திருந் தானே.
பஞ்சாக்ஷரம் இறைவனின் ஆலயமாக விளங்கும். சீவனின் தூல உடலும் இறைவனின் ஆலயமே. இந்த பருவுடலைக் கடந்த சூக்கும உடலிலும் சிவன் கோவில் கொண்டுள்ளான்.
#920. ஐந்தெழுத்தின் பயன்
இருந்த இவ்வட்டம், இரு மூன்று இரேகை
இருந்த அதனுள் இரேகை ஐந்தாக,
இருந்த அறைகள் இருபத்தைஞ்சு ஆக,
இருந்த அறை ஒன்றில் எய்தும் அகாரமே.
இந்தச் சக்கரம் ஆறு கோடுகளை உடையது. அதில் கட்டங்களையும் ஐந்து ஆக்கினால், அறைகள் (ஐந்து X ஐந்து) இருபத்து ஐந்து ஆகும். அதில் நடுக் கட்டத்தில் சிவனைக் குறிக்கும் அ சென்று பொருந்தும்.
# 921. நுண்ணிய சிவாயலாம் அமைக்கலாம்
மகாரம் நடுவே; வளைந்திடும் சத்தியை
ஒகாரம் வளைத்திட்டும் பிளந்து ஏற்றி,
அகாரம் தலையாய் இருகண் சிகாரமாய்
நகார வகாரம் நற்காலது நாடுமே.
மண்டலமிட்ட குண்டலினி சக்தியை கீழே நோக்க விடாமல் மேலே ஏற்றிச் செல்ல வேண்டும். அகாரமும், உகாரமும் பொருந்துகின்ற இடமாகிய புருவ மத்திக்கு அதைச் செலுத்த வேண்டும். சிவன் அறிவு மயமாக விளங்கும் இடமே தலை. அவன் அக்கினி விளங்கும் இடமே இரு கண்கள். சுவாதிஷ்டனத்தில் உள்ள நகாரமும், விசுத்தியில் இருக்கும் வகாரமும் சுழுமுனை வழியே விருப்புடன் அடையப் படும்.
#922. பிரணவம்
நாடும் பிரணவம் நடு இரு பக்கமும்
பாடும் அவர்வாய் பரந்து அங்கு நின்றது
நாடும் நடுவுள் முகம் நமசிவாய
ஆடும் சிவாய புறவட்டத்து ஆயதே.
பிரணவ மந்திரத்தை புருவ மத்தியில் இரண்டு கண் பார்வையையும் பொருத்தி நோக்க வேண்டும். அப்போது அண்ணாக்கு பகுதியில் ஓர் உணர்வு தோன்றிப் பரவும் அதுவே நமசிவாய என்பது ஆகும். பிறகு அந்த உணர்வே சிரசை அடைந்து தலையைச் சுற்றியுள்ள பகுதியில் சிவாயநம என்று விளங்கும்.
#923. மாறி மாறி அமையும்
ஆயும் சிவாய நமமசி வாயந
ஆயும் நமசிவாய யநமசிவா
ஆயுமே வாயநமசி எனும் மந்திரம்
ஆயும் சிகாரம் தொட்டு அந்தத்து அடைவிலே
சக்கரத்தில் நமசிவாய என்பது மாறி மாறி அமையும். சிவாயநம, மசிவாயந, நமசிவாய, யநமசிவா, வாயநமசி என்று மந்திரம் சி என்ற எழுத்தில் தொடங்கிச் சி என்ற எழுத்தில் முடியும்.