Quantcast
Channel: Tamil Brahmins - 1,8,12,13,14,16,18,19,20,21,24,25,26,27,28,29,30,31,32,33,34,35,36,37,38,39,40,41,43,44,49,50,51,52,53,54,55,57,58,59,60,61,62,63,65,68,69,70,73,74,75,76,78,79,80,81,82,83,84,85,86,87,88,89,92,93,94,95,96,97,98,100,101,102
Viewing all articles
Browse latest Browse all 5709

Quotable Quotes Part II

$
0
0
#929 to #932

#929. ஐம்பூதங்களின் தானங்கள்

இயலும் இம்மந்திரம் எய்தும் வழியின்
செயலும் அறியத் தெளிவிக்கும் நாதன்
புயலும் புனலும் பொருந்துஅங்கி மண் விண்
முயலும் எழுத்துக்கு முன்னா இருந்ததே.

திருவம்பலச் சக்கரத்தில் நிலம், நீர், தீ, வலி, வெளி என்ற ஐம் பூதங்களுக்கும் உரிய எழுத்துக்கள் ல, வ, ரம், ய, அ என்பவை ஆகும்.

நம் உடலில் ஐம்பூதங்களின் இடம் இவை:


நிலம் ….மூலாதாரம்


நீர்………..கொப்பூழ்


தீ………….இதயம்


வளி……..கழுத்து


வெளி…..புருவ மத்தி


#930. மும்மலங்கள் நீங்கும்


ஆறெட்டு எழுத்தின் மேல் ஆறும் பதினாலும்

ஏறிட்டு அதன்மேலே விந்துவும் நாதமும்
சீறிட்டு நின்று, ‘சிவாய நம’ என்ன,
கூறு இட்டு மும்மலம் கூப்பிட்டுப் போமே.

( 6 x 8 = 48 ) நாற்பத்தெட்டாவது எழுத்தாகிய ‘ஸ’காரத்தை, ஆறாவது எழுத்தாகிய ‘ஊ’காரத்துடனும், பதினான்காவது எழுத்தாகிய ‘ஔ’ காரத்துடனும் சேர்த்தால் பராசக்தியின் பீஜ அக்ஷரமாகிய ‘சௌ’ கிடைக்கும். இதனுடன் விந்துவும், நாதமும் பொருந்தும் வண்ணம் அமைக்க வேண்டும். அதை மேலே எழும்பும் வண்ணம் செய்து ‘சிவாய நம’ என்று ஜபிக்க வேண்டும் அப்படிச் செய்தால் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் ஜபம் செய்பவரின் உடலை விட்டு ஓலமிட்டபடி ஓடி மறைந்து விடும்.

ஸ + ஊ = ஸூ

ஸூ + ஔ = சௌ

சௌ என்பது பராசக்தியின் பீஜ அக்ஷரம் ஆகும்.

#931. நாத ஒலி கேட்கும்

அண்ணல் இருப்பது அவள் அக்கரத்துளே;

பெண்ணின் நல்லாளும் பிரான் அக்கரத்துளே;
எண்ணி இருவர் இசைந்து அங்கிருந்திடப்
புண்ணிய வாளர் பொருள் அறிவார்களே.

‘சௌ’ என்ற பீஜாக்ஷரத்தில் சிவனும் இருப்பான், சக்தியும் இருப்பாள். சிவசக்தியர் இங்ஙனம் இணைந்து சிரசில் ஈசானத்தில் இருப்பதை அறிந்து கொண்டவர், அதைப் பின்பக்க மூளையில் நாத ஒலியாகக் கேட்பர்.

#932. சிவதாண்டவம்

அவ் இட்டு வைத்து அங்கு அர இட்டு மேல் வைத்து

இவ் இட்டு பார்க்கில் இலிங்கம் – அதாய் நிற்கும்;
மவ் இட்டு மேலே வளி உறக் கண்டபின்
தொம் இட்டு நின்ற சுடர்க்கொழுந்து ஆமே.

ஈசானிய திசையில் ‘ஹர’ என்று சிவாக்கினியைத் தூண்ட வேண்டும். அப்போது ஹரி என்னும் ஞானலிங்கம் விளங்கும். தொண்டையிலுள்ள விசுத்திச் சக்கரத்திலிருந்து, சுழுமுனை வழியே, பிராணவாயு தொண்டைக்கு மேலே செல்லும் போது, தொம் தொம் என்று கூத்தாடும் ஒளி வடிவான இறைவன் விளங்குவான்.

Viewing all articles
Browse latest Browse all 5709

Trending Articles